கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 228 பயணிகள், 12 பணியாளர்களுடன் நேற்று (27-05-2018) மாலை கிளம்பிய UL 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம்,  அப்பகுதியில் நிலவிய காலநிலையின் காரணமாக வழுக்கிச் சென்று அருகில் இருந்த மின்கம்பங்களில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டதாகவும், ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

மேலும், இந்த விபத்தில் விமானத்தின் சக்கரம் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.