இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் துடுப்பாட்ட வீரர் சாமர கபுகெதர மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி வீரர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாமர கபுகெதர ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சுழற்பந்துவீச்சாளரான ஜெப்ரி வண்டர்சே டெஸ்ட் அணிக்கு தெரிவாகியுள்ளார். அதேபோல் இவரின் பெயர் ஒருநாள் அணியிலும் இருபதுக்கு 20 அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்து – இலங்கை அணிகள் மோதும் முத்தொடர் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி முதல் ஜனவரி 6ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் ஐந்து ஒருநாள் போட்டிகளும், இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளும், இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கொண்ட முத்தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.
இதற்கான வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர், அதன்படி டெஸ்ட் அணியில் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ். உதார ஜயசுந்தர, தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, மிலிந்த சிறிவர்தன, கித்ருவான் வித்தானகே, திமுத் கருணாரத்ன, தம்மிக பிரசாத், நுவன் பிரதீப், சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா மற்றும் ஜெப்ரி வண்டர்சே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் அணியில் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு திரிமான்ன, டில்ஷான், குசல் ஜனித், தினேஷ் சந்திமால், மிலிந்த சிறிவர்தன, தனுஷ்க குணதிலக, சசித்திர சேனாநாயக்க, அஜந்த மெண்டிஸ், தம்மிக்க பிரசாத், லசித் மாலிங்க, நுவன் பிரதீப், சுரங்க சமீர, சாமர கபுகெதர, ஜெப்ரி வண்டர்சே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் அஜந்த மெண்டிஸ் இருபதுக்கு 20 அணியில் சேர்க்கப்படவில்லை. இருபதுக்கு 20 அணிக்கு லசித் மலிங்க அணித்தலைவராக செயற்படுகிறார்.
அதேவேளை குசல், செஹான் ஜயசூரிய, சந்திமால், அஞ்சலோ மெத்தியூஸ், மிலிந்த சிறிவர்தன, சாமர கபுகெதர, கித்ருவன் வித்தானகே, டில்ஷான், நுவன் குலசேகர, துஷ்மந்த சமீர, திசர பெரேரா, ஜெப்ரி வண்டர்சே, சசித்திர மற்றும் இசுரு உதார ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM