எகிப்­திய தலை­நகர் கெய்­ரோவில் செயற்­பட்டு வந்த ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் முக்கிய செயற்­பாட்­டாளர் ஒரு­வரை தாம் சுட்டுக் கொன்­றுள்­ள­தாக அந்­நாட்டு பொலிஸார் திங்­கட்­கி­ழமை அறி­வித்­துள்­ளனர்.
அஷ்ரப் அலி அலி ஹஸ­னெயின் அல் கரா­பிலி என்ற மேற்­படி செயற்­பாட்­டா­ளரைக் கைது­செய்யச் சென்ற வேளை, அவர் தம் மீது துப்­பாக்கிப் பிர­யோ­கத்தை மேற்­கொண்­ட­தா­கவும் இத­னை­ய­டுத்து தாம் நடத்­திய பதில் துப்­பாக்கிச் சூட்டில் அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் அந்­நாட்டு உள்­துறை அமைச்சு தெரி­விக்­கி­றது.
இந்த செயற்­பாட்­டா­ளரை தேடப்­படும் ஒரு­வ­ராக அந்­நாட்டு பொலிஸார் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் குறிப்பிட்டு அறிவித்தல் ஒன்றை பிறப் பித்திருந்தனர்.