எதிர்வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுன தொடர்ந்தும் தாமரை மொட்டுச்சின்னத்தின் கீழேயே போட்டியிடும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தாமரை மொட்டே கட்சியின் அடையாளம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளிற்கு அனுமதிக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெளிவாக தெரிவித்துள்ளார் எனவும் ஜி.எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் கொள்கைகளையும் மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளும் எவரும் கட்சியில் இணையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் பல காரணங்களிற்காக தேர்தல்களை தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அமைச்சர் பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.