நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு  அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அப் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.