கம்பஹா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான மழையினால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இந் நிலையில் கம்பஹா கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நா‍ளை திங்கட்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.