மதங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களை பிளவுபடுத்த நினைத்தால் அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம் என ஐக்கிய தேசிய முன்னணியின் பொது செயலாளர் மைத்திரி குணரத்ன தெரிவத்தார்.

அட்டனில் இன்று நடைபெற்ற சுகாதார மற்றும் ‍பொருளாதார செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் 

எந்த மதமும் தீமையானவற்றை போதிப்பதில்லை. ஆனல் வடக்கில் சுமந்திரனும் விக்னேஸ்வரனும் வடக்கில் விகாரைகள் அமைக்கக்கூடாது என்று தெரிவித்து வருகின்றனர். இவர்களின் நோக்கம் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிளவுபடுத்துவதேயாகும்.

காலியில் நுழையும்போதே ஒரு இந்துக் கோயில்தான் இருக்கின்றது. அதனை எவராவது உடைக்க முற்படுகின்றார்களா? மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி பிரிவினைவாதத்தை தூண்டிவிட்டு இவர்கள் அரசியல் செய்ய நினைக்கின்றார்கள் என்றார்.