சுன்­னாகம் நிலத்­தடி நீரில் எண்ணெய் கலந்­தது தொடர்­பான விட­யத்தில் வட­மாகாண சபையால் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­தில்லை என விவ­சாய அமைச்சர் சார்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் அது தொடர்­பாக ஆய்வு அறிக்கை வெளியிட்­டது ஏன் என மல்­லாகம் நீதி­மன்றம் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.

இது தொடர்பில் தெரிய வரு­வ­தா­வது,

சுன்­னாகம் உள்­ளிட்ட பகு­தி­க­ளில்­ உள்ள தண்­ணீரில் எண்ணெய் கலந்­தது தொடர்­பான வழக்கு நீதிவான் ஏ.ஜுட்சன் முன்­னி­லையில் நேற்று முன்­தினம் மல்­லா­கத்தில் இடம்­பெற்­றது. கடந்த தவ­ணை­யின்­போது நேற்­று­முன்­தினம் ஆஜ­ரா­க­வேண்­டிய விவ­சாய துறை அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் நீதி­மன்றில் சமு­க­ம­ளிக்­க­வில்லை. அமைச்சர் சார்­பாக உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சமு­க­ம­ளித்­தமை தொடர்­பாக அதனை ஏற்க மறுத்து நீதி­மன்று உத்­தி­யோ­கத்­தரை எச்­ச­ரிக்கை செய்­த­துடன் ஐங்­க­ர­நே­ச­னுக்கு பிடி­யாணை பிறப்­பிக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்­தது.

இதன்­போது ஐங்­க­ர­நேசன் சார்பில் சட்­டத்­த­ரணி வர­த­ராசா முன்­னி­லை­யானார். பாதிக்கப்­பட்ட மக்­க­ளுக்குத் தண்ணீர் வழங்­க­வேண்­டிய கடப்­பாடு வட­மா­காண சபைக்கு இல்லை. அது மத்­திய அரசின் பொறுப்பு. மனி­தா­பி­மான அடிப்­ப­டையில் தான் வட­மா­காண சபை வழங்­கி­யது என்று சட்­டத்­த­ரணி வர­த­ராசா தெரி­வித்­த­மை­ தொடர்­பாக நீதி­மன்று கேள்வி எழுப்­பி­யுள்­ளது. மத்­திய அரசு பொறுப்பு என்றால் எதற்­காக நிபு­ணர்­களை நிய­மித்து ஆய்­வு­களை மேற்­கொண்­டனர்? அதனை ஏன் வெளிப்­ப­டுத்­தினர்? இதற்­கான பதில்­களை அடுத்த தவ­ணையில் விவ­சாய அமைச்சர் நீதி­மன்றில் நேரில் தெளி­வு­ப­டுத்­த­வேண்டும் என உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

குறித்த வழக்­கா­னது எதிர்­வரும் 17ஆம் திக­திக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு அன்றைய தினம் விவசாய அமைச்-சர் மற்றும் நீர்வளச் சபையின் பொறு-ப்ப-திகாரி இருவரையும் நீதிமன்றில் முன்னி-லை-யாகுமாறு உத்தர-விடப்பட்டு-ள்-ளமை

குறி-ப்பிடத்தக்கது.