ஹாலி - எலை புகையிரத நிலையப் பகுதியிலுள்ள வீடுகளில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதனால் ஹாலி - எலைப் பொலிஸார் ரோந்து சேவைகளை பலப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

குறித்த இப் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதனால், இதனை தடுக்கும் வகையில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் ஹாலி - எலை பொலிஸாருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த பாதுகாப்பு சேவையானது இரவு, பகலாக இடம்பெறும் என்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த பகுதியில் நடமாடுபவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றும் ஹாலி - எலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.