இலங்கையில் இடம்பெறும் சர்வதேசப் போட்டிகளிற்கான ஆடுகளங்களை தயாரிப்பதற்கு சர்வதேச ஆடுகள தயாரிப்பாளர்களை பயன்படுத்துவது என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தீர்மானித்துள்ளது.

இலங்கையின் காலி மைதானத்தின் ஆடுகளத்தை தயாரிப்பதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இந்த முடிவை எடுத்துள்ளது.

நவம்பர் மாதம் இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தின் போது ஆடுகளங்களை தயாரிப்பதற்காக சர்வதேச நிபுணத்துவத்தை பயன்படுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தீர்மானித்துள்ளது.

சுயாதீன ஆடுகள தயாரிப்பாளரை நாங்கள் எதிர்காலத்தில் நியமிப்போம் அவர்  இலங்கையின் ஆடுகளதயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்கசுமதிபால தெரிவித்துள்ளார்.