களுபோவில பிரதேசத்தில் தனியார் வங்கி ஒன்றில் இன்று(27-05-2018) அதிகாலை 4.10 மணியளவில் திடீரென தீ பரவியுள்ளது. இதில் வங்கியின் முன் பாகம் மற்றும் பணம்பெறும் இயந்திரம் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவு அதிகாரிகளால் தீயணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லையெனவும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொஹூவல பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.