கருக்கலைப்பு மீதான தடையை நீக்குவதற்கு ஆதரவாக அயர்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்

கருக்கலைப்பு மீதான தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து அயர்லாந்தில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வஜன வாக்கெடுப்பில் தடையை நீக்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக 66 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

தற்போது பெண்களின் உயிருக்கு ஆபத்து என்ற நிலை காணப்பட்டால் மாத்திரமே அயர்லாந்தில் கருக்கலைப்பில் ஈடுபட முடியும், பாலியல் வன்முறைகள் போன்றவற்றினால் கர்ப்பமானவர்கள் கருக்கலைப்பில் ஈடுபட முடியாது.

இந்த பின்னணியில் இடம்பெற்ற சர்வஜனவாக்கெடுப்பில்  கருக்கலைப்பிற்கு அனுமதிக்க வேண்டும்  என்பதற்கு ஆதரவாக பெருமளவான மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த விடயத்தில் தாரளப்போக்கை பின்பற்றவேண்டும் என்பதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த பிரதமர் லியோ வரட்கர் தேர்தல் முடிவுகள் வெளியான நாளை அயர்லாந்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆமைதியான புரட்சியொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தள்ள பிரதமர் பெண்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுப்பது தொடர்பில் அயர்லாந்து மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது வெளிப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.