மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கிய மூவரை காப்பாற்ற முற்பட்டு வௌ்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

29 வயதுடைய மேற்படி  பொலிஸ் உத்தியோகஸ்தரான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவர் மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.