வவுனியா ஒமந்தையில் நேற்று மாலை 6.10மணியளவில் ரயிலுடன் மோதி டிப்பர் வாகனம் விபத்துக்குள்ளானது.

ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் மண் மற்றும் கல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ரயில் தண்டவாளத்தில் புதையுண்டது. இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் குறித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் புகையிரதம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை போக்குவரத்து பொலிஸார் துரிதமாக செயற்பட்டு டிப்பர் வாகனத்தினை அவ்விடத்திலிருந்து அகற்றினார்கள்.

இவ் விபத்துச் சம்பவம் காரணமாக சுமார் 30நிமிடங்களின் பின்னரே புகையிரதம் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தது.