புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி வித்­தி­யாவின் படு­கொலை தொடர்­பாக இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ரணை அறிக்­கை­களை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் நீதி­மன்ற மறு தவ­ணை­யின்­போது மன்றில் சமர்ப்­பிக்க வேண்டும் என ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி வை.எம். றியாஸ், தெரிவித்தார். அவ்­வாறு சமர்ப்­பிக்கத் தவறும் பட்­சத்தில் அது தொடர்­பாக நீதி­மன்றம் உரிய கட்­ட­ளையை பிறப்­பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த மாண­வியின் படு­கொலை தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு விசா­ர­ணைக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போது குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­னரால் இந்த படு­கொலை தொடர்­பான அறிக்­கைகள் எதுவும் மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டாத நிலை­யி­லேயே நீதி­பதி மேற்­கண்ட கட்­ட­ளையைப் பிறப்­பித்­தி­ருந்தார்.

மாணவி படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்­பான வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டு 8 மாதங்கள் பூர்த்­தி­யா­கி­யி­ருந்த நிலை­யிலும் அது தொடர்­பான எது­வித அறிக்­கை­களும் மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை என நீதி­பதி தெரி­வித்­தி­ருந்தார்.

நீதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்

மேலும் படு­கொலை தொடர்­பான விசா­ர­ணை­களை ஊர்­கா­வற்­றுறை பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு பாரப்­ப­டுத்­தி­யதன் காரணம், விசா­ர­ணைகள் துரி­த­மாக மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவேயாகும். ஆனால் அவ்­வா­றி­ருந்தும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் இது­வரை அறிக்­கைகள் சமர்ப்­பிக்­க­வில்லை.

இவ்­வ­ழக்கு விசா­ர­ணையில் விளக்­க­ம­றியல் நீண்டு செல்­கின்­றது என ஊட­கங்கள் வாயி­லாக செய்திகள் வெளி­வ­ரு­கின்­றன. எனினும் அத்­த­கைய விளக்­க­ம­றியல் நீடிப்­ப­தற்­கான கார­ணத்தை மக்­களால் விளங்­கிக்­கொள்­ள­மு­டி­ய­வில்லை.

ஒவ்­வொரு தட­வையும் அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக வழக்கை மறு­ த­வ­ணைக்கு ஒத்தி வைப்­பதால் மக்­க­ளிற்கு குழப்­ப­மான கருத்­து­நிலை தோன்­றக்­கூடும். எனவே இது­வரை குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் குறித்த வழக்கு தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ரணை அறிக்­கைகள் மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வேண்டும்.

அவ்­வாறு சமர்ப்­பிக்கத் தவறும் பட்சத் தில் அது தொடர்பாக நீதிமன்று உரிய கட்

டளையை பிறப்பிக்கும் என நீதிபதி மேலும் தெரிவித்தார். இதேவேளை குறித்த வழக்கு விசா ரணையை எதிர்வரும் மார்ச் 4 ஆம் திக

திக்கு ஒத்திவைத்துள்ளதாக நீதிபதி தெரிவித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.