இந்தியா - தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட  தமிழக உறவுகளுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் தமிழ்த் தேசிய  மக்கள் முன்னணியின் எற்பாட்டில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பை அடுத்து காந்தி பூங்காவின் முன் காலை 10 மணிக்கு  ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

இதனை தொடர்ந்து  "கொல்லாதே கொல்லாதே! ஜனநாயத்தை கொல்லாதே", "நிறுத்து! கொலைகாரர்களை நீதியின் முன் நிறுத்து", "இந்திய அரசே! இலங்கை தமிழர்களுக்கும், இந்திய தமிழர்களுக்கம் தொப்புள் கொடி உறவு, எனவே சீண்டாதே சீண்டாதே  தெர்ப்புள் கொடி உறவுகளை" போன்ற சுலோகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும்,  கோசமிட்டும் படுகொலையை கண்டித்து 11 மணிவரை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.