உலக சந்­தையில் எரி­பொருள் விலை குறைந்­த­மை­யைய­டுத்து இலங்கை மக்­க­ளுக்கும் குறித்த நிவா­ர­ணத்தை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான ஆரம்ப கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதன்­படி விரைவில் எரி­பொ­ருளின் விலையை குறைத்து நிவா­ரணம் வழங்­குவோம் என பெற்­றோ­லிய வளத்துறை அமைச்சர் சந்­திம வீரக்­கொடி தெரி­வித்தார்.

ஏற்­க­னவே எரி­பொருள் விலை குறைக்­கப்­பட்­ட­மை­யினால் மக்கள் எல்­லை­யற்ற கடன் பாரத்தை சுமக்க வேண்­டி­யேற்­ப­பட்­டது. இவ்­வா­றான சிக்கல் நிலை­மைக்கு இட­ம­ளிக்­காமல் நிரந்­தர தீர்­வினை வழங்­குவோம். மேலும் இலங்கை பெற்­றோ­லிய கூட்­டு­தா­ப­னத்­திற்கு ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ், மிஹின் லங்கா மற்றும் மின்­சார சபை ஆகிய நிறு­வ­னங்கள் பில்­லியன் கணக்கில் பணம் செலுத்த வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சாங்க தக­வல்கள் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு அமைச்சர் சந்­திம வீரக்­கொடி மேலும் குறிப்­பி­டு­கையில்,

உலக சந்­தை­யில எரி­பொருள் விலை குறைந்­த­மைக்­காக இலங்­கையில் பெற்­றோலின் விலையை குறைப்­ப­தற்கு இய­லாது. ஏற்­க­னவே எரி­பொ­ருளின் விலையை பெரு­ம­ளவில் குறைத்­த­மை­யினால் நாட்டில் டொலர் பெறு­மதி குறை­வ­டைந்­தது. மேலும் மக்கள் பெரும் கடன் சுமையை சுமக்க வேண்­டி­யேற்­பட்­டது.

தற்­போ­தைக்கு 30 டொலரில் பீப்பாய் இலங்கை வருகை தந்த போதிலும் குறித்த நிவா­ர­ணங்­களை மக்­க­ளுக்கு வழங்­கு­வதில் பல சிக்கல் நிலை காணப்­ப­டு­கின்­றது. ஏற்­க­னவே எரி­பொருள் விலை குறைக்­கப்­பட்­ட­மை­யினால் மக்கள் எல்­லை­யற்ற கடன் பாரத்தை சுமக்க வேண்­டி­யேற்­ப­பட்­டது.

இதே­வேளை இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்­திற்கு ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் 20 பில்­லியன் ரூபாவும், மிஹின் லங்­கா­ 5 பில்­லியன் ரூபாவும் வழங்க வேண்­டி­யுள்­ளது. அதே­போன்று இலங்கை மின்­சார சபை உள்­ளிட்ட நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து பில்­லியன் கணக்கில் பணம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இவற்றில் மாதாந்த வட்­டியே செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது

ஆகவே உலக சந்­தையில் எரி­பொருள் விலை குறைந்­த­மை­யைய­டுத்து இலங்கை மக்­க­ளுக்கும் குறித்த நிவா­ர­ணத்தை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி விரைவில் எரிபொருளின் விலையை குறை

த்து நிவாரணம் வழங்குவோம். இது

தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார் த்தை நடத்தியதன் பின்னர் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்றார்.