பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முதன்முறையாக 13 திருநங்கைகள் போட்டியிட உள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலும் அதை தொடர்ந்து  சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளையில் முறைகேடுகள் ஏற்படாமல் இருக்க தேர்தல் ஆணையகம் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

பாகிஸ்தான் தேர்தலில் கடந்தாண்டு 4 திருநங்கைகள் போட்டியிட்ட நிலையில் தற்பொழுது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 2 திருநங்கைகளும், சட்டசபை தேர்தலில் 11 பேரும் போட்டியிட உள்ளனர்.