சட்­ட­வி­ரோ­த­மான முறையில் சவூ­தியில் தங்­கி­யி­ருந்த இலங்­கை­யர்கள் 19 பேர் நேற்று நாடு­தி­ரும்­பியதாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

சட்­ட­வி­ரோ­த­மான முறையில் சவூ­தியில் தொழில் செய்து கொண்­டி­ருக்கும் போது அந்­நாட்டு பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்ட இலங்­கை­யர்கள் 19 பேர் நேற்று அதி­காலை கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்­துள்­ளனர். இவர்­களில் 3பெண்கள் மற்றும் 16 ஆண்கள் அடங்­கு­கின்­றனர்.

இவ்­வாறு நாடு­தி­ரும்­பி­ய­வர்­களை பணி­ய­கத்தின் கட்­டு­நா­யக்க விமான நிலைய பிரிவில் அமைந்­துள்ள 'சஹன பியச' நிலை­யத்தில் தக­வல்­களை பெற்­றுக்­கொண்­டதன் பின்னர், அவர்கள் தங்கள் சொந்த இடங்­க­ளுக்கு செல்­வ­தற்­கான வச­திகள் செய்து கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, சுற்­றுலா விசா மூலம் வெளி­நா­டு­க­ளுக்கு செல்லும் பெரும்­பா­லா­ன­வர்கள் அந்த நாடு­களில் தொழில் புரி­கின்­றனர். இவ்­வாறு சுற்­றுலா விசா மூலம் வெளி­நா­டு­க­ளுக்கு சென்று தொழில் புரி­வது சட்­ட­வி­ரோ­த­மாகும்.

எனவே எதிர்­கா­லத்தில் சுற்­றுலா விசா மூலம் வெளி­நா­டு­க­ளுக்கு சென்று தொழில் புரி­ப­வர்கள் தொடர்பில் கண்டறிந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.