அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் கம்பஹா பகுதியிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீரற்ற காலநிலையால் நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக அத்தனகல ஓயாவின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

இந் நிலையில் அத்தனகல ஓயாவை அண்டிய குறிப்பாக நீர்கொழும்பு, ஜா எல, கட்டான, மினுவாங்‍கொட, கம்பஹா மற்றும் அத்தனகல ஆகிய பகுதிகளின் தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.