ஒட்டுசுட்டான் பிரதேச சபைக்குட்பட்ட பொது மக்களின் காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் கையடக்கத் தொலைபேசி மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி விடயம் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா இராணுவ அதிகாரியுடன் கலந்துரையாடுவதற்காக இராணுவ முகாமிற்கு சென்றிருந்தார். 

இந் நிலையில் மேற்படி முகாமிற்கு பொறுப்பாக இருந்த இரண்டாம் நிலை அதிகாரி ஒருவருடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடும் காட்சியை ஊடகவியலளார்கள் பதிவு செய்தபோது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் தமது கையடக்க தொலைபேசியினூடாக ஊடகவியலாளர்களின் நடவடிக்கையை  ஒளிப்பதிவு செய்தனர்.