தன்­னு­ட­னான காதல் உறவை முறித்துக் கொண்ட தனது காத­லரைத் தண்­டிக்­கும் முக­மாக அவ­ரது நாக்கை கடித்து அவரை நகரவிடாது வலியால் துடிக்க வைத்த சம்பவமொன்று கிழக்கு சீனாவில் அன்­ஹுயி மாகா­ணத்­தி­லுள்ள கியன்ஷான் நகரில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஸொயு என்ற 26 வயது பெண்ணே தனது காத­ல­ரான லியு என்ற 23 வயதுடைய இளை­ஞரின் நாக்கை விடாது இறுகக் கடித்து அவரை வலியால் துடிக்க வைத்­துள்ளார். ஸொயுவும் லியுவும் பல வருட கால­மாக காத­லித்து வந்த நிலையில் அண்­மை­யி­லேயே லியு அவ­ரு­ட­னான உறவை முறித்துக்கொண்­டார்.

சம்­பவ தினம் தனது காத­லரை வீதியில் கண்ட  அந்தப் பெண் அவரை வழி­ம­றித்து அவ­ரிடம் இறு­தி­யாக முத்­த­மொன்றைப் பகிர்ந்துகொள்ள விரும்­பு­வ­தாக  தெரி­வித்­துள்ளார்.

அதற்குக் காதலர் இணங்கவும்  காதலி அவரை முத்­த­மி­டு­வது போன்று  பாவனை செய்து திடீ­ரென  அவ­ரது  நாக்கை இறுகக் கடித்­துள்ளார். வலி தாங்­காது அந்தக் காதலர் கூச்­ச­லிட்டு  காத­லி­யி­ட­மி­ருந்து விடு­பட முயற்­சித்த போது, இந்தக் காட்­சியைப் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்த அவ்­வ­ழி­யாகச் சென்ற  பாத­சா­ரிகள்  பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுக்­கவும் சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார்  அந்தப் பெண்ணின் மீது மிளகுத் தூள் பிர­யோ­கத்தை மேற்­கொண்டு பெரும் போராட்­டத்தின் மத்­தியில் அவ­ரி­ட­மி­ருந்து அந்தக் காத­லரை மீட்­டுள்­ளனர். 

இத­னை­ய­டுத்து  அந்தக் காதலர்  மருத்­து­வ­ம­னைக்கு  கொண்டு செல்­லப்­பட்டார்.  மேற்­படி  சம்­ப­வத்தை அவ்வீதி வழி­யாகச் சென்ற சிலர் தமது கைய­டக்கத் தொலை­பேசி புகைப்­ப­டக்­க­ரு­வியைப் பயன்­ப­டுத்தி காணொ­ளிப்­ப­ட­மெ­டுத்து  வெளி­யிட்­டுள்­ளனர்.