ரத்மலானை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனஞ்சய டி.சில்வாவின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

63 வயதுடைய கே. ரஞ்சன டி.சில்வா என்பவேர இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவர் தெஹிவளை, கல்கிஸை மாநகர உறுப்பினராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இச் சம்பவத்தின் போது மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.