வடகொரிய ஜனாதிபதியுடன் இடம்பெறவிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரத்துச்செய்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன்னிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் நிரந்தர சமாதானத்திற்கான பெரும் வாய்ப்பை உலகம் இழந்துவிட்டது எனகுறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவின் சமீபத்தைய அறிக்கையில் தென்பட்ட கடும் சீற்றமும் மோதல் போக்குமே தான் உச்சிமாநாட்டிலிருந்து விலகுவதற்கான காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யூன் 12 ம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த உச்சிமாநாட்டை பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.