(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றில் கணிதம் கற்பிக்கும்  ஆசிரியர், அப் பாடசாலையில்  கல்வி கற்கும் 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெல்லிப்பளை பொலிஸாரால் இன்று செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவராவார். கைது செய்யப்பட்ட இவரை இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.