(க.கிஷாந்தன்)

 

உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் அமர்வு இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றது.

   இன்றைய முதல் நாள் அமர்வில் சுமார் 30 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் கல்வி தொடர்பான கூடுதலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட அதேவேளை பெருந்தோட்ட துறையை சார்ந்த ஆசிரியர்கள் பொது மக்கள் சிலர் தமது யோசனைகளை வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குழுவினரிடம் கையளித்தனர்.

இதில் முக்கியமாக மலையக ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட இலங்கை கம்னியூச கட்சி, மெராயா விவசாய கழகம் மற்றும் பல குழுக்கள் தமது யோசனைகளை வருகை தந்திருந்த உத்தேச அரசியல் சீர்திருத்த பொது மக்கள் கருத்தினை கேட்டறியும் நால்வர் அடங்கிய குழுவினரிடம் கையளித்தனர் என்பது குறிப்பிடதக்கது.