மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ளார் என இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு இன்று தெரிவித்துள்ளது.

இன்டர்போலின் சிங்கப்பூர் பிரிவினர் இதனை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர் என இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ள மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி தொடர்பில் இன்டர்போல் அர்ஜூன மகேந்திரனை கைதுசெய்வதற்கு பிடியாணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது