மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆள்காட்டி வெளி கிராம அலுவலர் பிரிவில் உள்ள குமானாயங்குளம் கிராமத்தில் உயர்ந்த மரங்களில் அதி விசம் கொண்ட 'பப்பரக்கொப்பான்' எனப்படும் ஒருவகை குளவி கூடு உள்ளதால் அதனை அகற்றுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிகவும் ஆபத்தானது இந்த தேன் குளவிகள் கடந்த சில தினங்களாக அப்பகுதியைச் சேர்ந்த பலரை தீண்டியுள்ளது. இதனால் குறித்த கிராம மக்கள் மத்தியிரல் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதோடு மக்கள் குறித்த பகுதியூடாக நடமாட அஞ்சுகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பல முறை கிராம மக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்தும் குழவிகளின் தீண்டுதல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய குறித்த 'பப்பரக்கொப்பான்' என அழைக்கப்படும் குறித்த குளவிக்கூட்டினை அகற்ற உறிய அதிகாரிகள் உடன் முன் வரவேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM