(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

இலங்கை தேயிலையின்  நாமத்தினை பிரபல்யப்படுத்த அறவிடும் தேயிலை ஊக்குவிப்பு நிதியத்தின் மூலமாக அதற்காக பாடுபடும் மக்களுக்கு என்ன வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இலங்கை தேயிலை சபை (திருத்தச்சட்டம்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு குறித்த விவாதத்திலேலயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  

அவர் மேலும் கூறுகையில், 

இலங்கையின் தேயிலை உற்பத்தியில் சிலோன் டீ என்ற பெயரை தக்கவைக்க அல்லது பிரபல்யப்படுத்த அதற்கான அறவீடு ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு கிலோகிராம் தேயிலைக்கு 3.50 ரூபா  தேயிலை ஊக்குவிப்பு நிதியும் அறவிடப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அறவிடப்படும் இந்த நிதியின் மூலமாக என்ன நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படுகின்றது? இந்த நிதியின் உரிமையாளரை நியமிக்கும் பணிகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றதே  தவிர சிலோன் டி என்ற பெயரை பிரபல்யப்படுத்த, அதற்கான பாடுபடும் மக்களுக்கு இதனால் என்ன நன்மை கிடைத்துள்ளது. 

எனவே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடும் மக்களுக்கு நியாயமான சலுகைகளும் உரிமைகள் பெற்றுகொடுக்கப்பட வேண்டும் என்றார்.