மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகிறது இலங்கை

Published By: Digital Desk 4

24 May, 2018 | 02:48 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு நாளை பயணமாகவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி அடுத்த மாதம் 6 ஆம் திகதி  போர்ட் ஒவ் ஸ்பெய்னில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக இலங்கை அணி இம்மாதம் 30 ஆம் திகதி பயிற்சி போட்டி ஒன்றிலும் விளையாடவுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி க்ரொஸ் ஸ்லெட்டில் ஜூன் மாதம் 14 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ளதுடன், ஜூன் மாதம் 23 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஜ்டவுனில் பகலிரவுப் போட்டியாக நடைபெறும்.

இதுவரை இரு அணிகளும் 17 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றையொன்று சந்தித்துள்ளடன், இதில் இலங்கை அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் 3 போட்டிகளில்  மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது. ஏனைய 6 போட்டிகளும் வெற்றி  தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. 

இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமால் தலைமை தாங்குகின்றார். காயத்திலிருந்து குணமாகியுள்ள சிரேஷ்ட வீரர்களான அஞ்சலோ மெத்தியூஸ், சுரங்க லக்மால் ஆகியோர் இலங்கை குழாமில் அங்கம் வகிக்கின்றனர். 

இரு அணிகளிலும் அதிகமான இளம் வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதால், இரு அணிகளுக்குமே சவால் மிகுந்த தொடராவே இது அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33