சுதந்திர கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரான சனாத் நிஷாந்த மற்றும் அவரது சகோதரர் ஜகத் சமந்த பெரோ ஆகியோரின் விளக்கமறியல் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆராச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந் நிலையில் குறித்த இருவரும் பிணை கோரி மனுத்தாக்கல் செய்து பிணையில் வெளியில் வந்த போதும் பிணை விதிமுறைகளை கடைப்பிடிக்காத காரணத்தினால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் குறித்த இருவரையும் இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்திய போதே சிலாப நீதவான் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டார்.