(க.கமலநாதன்)

வெட்டு காயத்திலிருந்து  வெளியான  அதிகளவு இரத்தம் காரணமாகவே எம்பிலிபிட்டிய இளைஞனின் மரணம் சம்பவித்துள்ளதாக எம்பிலிபிட்டி  நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ அறிவித்தார்.

இரத்தினபுரி சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எம்பிலிபிட்டிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பிலான சட்ட வைத்திய அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டி.பி.குணதிலகவால் தயாரிக்கப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையை எம்பிலிபிட்டி  மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ இன்று  வெளியிட்டார். 

பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் அவரின் குஜப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெட்டு காயத்திலிருந்து அதிகளவு இரத்தம் வெயியேறியதால் மரணம் ஏற்பட்டதென கூறப்பட்டுள்ளது.   

 எம்பிலிபிடிய பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவரி வீட்டில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட கைகளப்பை பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டிட்குள் கொண்டுவர முற்பட்டுள்ளனர்.

இதன்போது நிகழ்வில் கலந்து கொண்ட  சுமித் பிரசன்ன என்ற நபர் மாடியிலிருந்து விழுந்ததில் உயிரிழந்திருந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் எம்பிலிபிட்டி  நீதிமன்றத்தில் சாட்சியமளித்த சுமித் பிரசன்ன என்பவரின் மனைவி எம்பிலிபிடிய பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தர்மரத்னவினால் தள்ளிவிடப்பட்டமையினாலேயே தனது கணவர் உயிரிழிந்தாக   குறிப்பிட்டிருந்தார்.