யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்தும் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கையில் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிரிழப்புக்கள் மற்றும் இடப்பெயர்வுகள் அசாதாரண நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றது.

யாழ்.மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றபோதிலும் கடும் பாதிப்புக்கள் இதுவரை ஏற்பட்டதாக இல்லை. வரட்சி தணிவதற்கான சூழல் இன்னும் ஏற்படவில்லை. எனினும் நாம் வரட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நீர் விநியோகம் செய்துகொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் ஊர்காவற்றுறை நெடுந்தீவு வேலணை காரைநகர் போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் நீர் விநியோகம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.