அவுஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

48 வயதான பிரசாத் சோமவன்ச என்ற பெண் நேற்று இரவு 8.00 மணிக்கும் 9.25இற்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கபடுகின்றது.

குறித்த பெண்ணின் கணவர் போக்குவரத்து துறையில் பணிபுரிவதால் சம்பவ தினமான நேற்று அவர் பிரிஸ்பேனில் இருந்துள்ளார். 

அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணை பலமுறை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றும், முடியாது போனதால் அந்தப் பெண்ணின் வீட்டிக்குச் சென்ற போது குறித்தப் பெண் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டுள்ளார். 

இது தொடர்பான விசாரணைகளை அவுஸ்திரேலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.