நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டின் பல பாகங்களில் மண்சரிவு அபாயம், வெள்ளப்பெருக்கு போன்ற பல்வேறுபட்ட அசௌகரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இரத்தினபுரி, கேகாலை, நுவரேலியா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.