மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது

இந்திய சினிமாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர் பிரபல நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி  டுபாயில் மரணமடைந்தார். இச் சம்பவம் திரைத்துறையினரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது. 

ஸ்ரீதேவி மறைவுக்குப் பின்னர் அவரின் திறமைக்காக பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் ‘மாம்’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவர் மறைந்ததன் பின்னரே வழங்கப்பட்டது. 

இந்நிலையில், பிரிக்ஸ் வர்த்தக அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் சகோதரியான ரீனா மார்வா விருதினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.