முல்லைத்தீவு பனங்காமம் குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் குளத்தின் வான் பகுதியை உயர்த்துவதற்கு பாரிய நிதியொதுக்கீடு  தேவையென வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளம் நீர்பாசனத்திணைக்களத்தின் கீழ் உள்ள பனங்காமம் குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் குளத்தின் வான் பகுதியை ஒரு அடியால் உயர்;ததுவதன் மூலம் மேலதிக நீரைத் தேக்கமுடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் இக்குளத்தின் அபிவிருத்திவேலைகளுக்கு நிதி கிடைக்கப்பெற்றதாகவும் அதன் மூலம் குறித்த அபிவிருத்தி வேலை முன்னெடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனிக்குள நீர்ப்பாசனத் திணைக்களத்தினைத் தொட்ரபுகொண்டு கேட்டபோது, கடந்த ஆண்டில் கிடைக்கப்பெற்ற நிதியில் அணைக்கட்டில் ஏற்பட்ட நீர்க்கசிவைத்தடுப்பதற்கான வேலைகளும் குளத்தின்கீழான நீர்விநியோக வாய்;கால்களின் புனரமைப்புப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த குளத்தின் வான் பகுதியை உயர்த்தி நீர்க்; கொள்ளளவை அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ள போதும், அதற்காக பெருமளவு நிதி தேவைப்படுகின்றது. 

எமது திணைக்களம் ஊடாகவும் கோரிக்கைகள் முன்வைக்க்பட்டுள்ள போதும் அதற்கான நிதி கிடைக்கவில்லை.

அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் இவ்வேலையை முன்னெடுக்க முடியும் என்றும் நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.