இலங்கையின் சமூகவலைத்தளங்களில் மிகவும் ஈடுபாடான வங்கியானஇ செலான் வங்கி சமூகவலைத்தளங்களில் அதன் சிறந்த செயற்பாடுகளுக்காக ACEF குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்ட INDO LANKA CUSTOMER ENGAGEMENT விருது வழங்கும் விழாவில் 3 விருதுகளை பெற்றுக்கொண்டது. செலானின் புதுமையான முறையிலான செலான் office challenge  நிகழ்வுகள் மற்றும் ஊக்குவிப்புக்கள், நவீன முறை செலான் இணையத்தளத்தின் உத்தியோகபூர்வ ஆரம்பம் மற்றும் ‘ஆண்டிற்கான சிறந்த சமூகவலைத்தள வர்த்தக நாமம்’; ஆகியவற்றிற்காக இவ்விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விருதுகள் இலங்கையின் வங்கி மற்றும் நிதித்துறையில் சமூகவலைத்தளங்களில் செலான் வங்கியின் முன்னனித்துவத்தை பறை சாற்றுகின்றது.

வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதிப் பொது முகாமையாளர் திரு திலான் விஜயசேகர இவ்வெற்றி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பட்டு இம்மூன்று விருதுகளையும் பெற்றுக்கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். செலான் வங்கி வாடிக்கையாளர்களுடன் நெருங்கிய உறவை பேணுவதையிட்டு பெருமையடைவதுடன் எமது சமூகவலைத்தள மூலோபாயம் மூலம் வாடிக்கையாளர்களுடன் நேருக்கு நேர் தொடர்பை பேணும் விதமாக கடந்த வருடங்களில் இணைப்பை பலப்படுத்தியுள்ளோம். கருப்பொருள், ஊடக மூலோபாயம் மற்றும் திட்டமிடல், செயற்பாடு, விளைவுகள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்விருதுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எமது குழுவினது அயராத முயற்சி காரணமாக சமூகவலைத்தளங்களில் வெறுமனே likeகளை மற்றும் பெற்றுக்கொள்ளாது சமூகவலைத்தள அனுபவத்தை வழங்குவதில் செலான் முன்னிற்கின்றது. பல துறைகளை சார்ந்த சர்வதேச ரீதியான சமூகவலைத்தள மூலோபாயங்களை ஆராய்ந்து அதனை திறன் அளவாக கொண்டு செயற்பட்டதனால் சர்வதேச ரீதியான அங்கீகாரம் கிடைத்ததையிட்டு பெருமையடைகிறோம்.” என்றார்.

இலங்கையின் புதிய ஊடக அத்தியாயத்தில் செலான் வங்கியின் சமூக மற்றும் டிஜிட்டல் தளங்கள் முன்னிலை வகிக்கின்றன. செலான் வங்கி 2015இன் இறுதி காலாண்டில் 300இ000 fansஐ தனது facebook பக்கத்திற்கு ஈர்த்ததன் மூலம் சமூகவலைத்தள இலக்கை அடைந்தது மட்டுமல்லாது அதன் சக நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அதன் fans மற்றும் வாடிக்கையாளர்களுடன மிக நெருங்கிய உறவை கொண்டுள்ளது.

கடந்த வருடம் செலான் வங்கியின் facebook  பக்கத்தில் பல போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டதோடு வங்கியின்; சேவைகள் தொடர்பான தெளிவுபடுத்தல் செயற்பாடுகளும் இடம்பெற்றன.

செலான் வங்கியால் கடந்த வருடம் ஒழுங்கு செய்யப்பட்ட புத்தாக்க online மற்றும் டிஜிட்டல் செயற்பாடுகள் மத்தியில் டிஜிட்டல் இளைஞர் தினம் மற்றும் எரிபொருள் deal ஆகியன வங்கியின்offline  ஊக்குவிப்புக்கள், அனுகூலங்கள் மற்றும் பரிசுகளுடன் நேரடியாக தொடர்பு பெற்றிருந்தன. இதற்கு மேலதிகமாக செலான் வங்கி தனது சமூகவலைத்தள fans மற்றும் வாடிக்கையாளர்களுடன் வெசாக் மற்றும் சிங்கள புது வருடம் ஆகியவற்றை கொண்டாடும்; முகமாக அவர்களின் படைப்பாற்றல் மற்றும் கற்பனை திறனை வளர்க்கும் நோக்கில் onlineஇல் பல போட்டிகளை ஏற்பாடு செய்து பரிசுகளை வழங்கியிருந்தது.

வாடிக்கையாளர்கள் அதிக தெளிவை பெறும் முகமாகவும் அவர்களுடன் நெருங்கிய உறவை பேணும் முகமாகவும் தனது அனைத்து முக்கிய சந்தைப்படுத்தல் முயற்சிகளையும் வங்கி ஒருங்கிணைத்துள்ளது.

INDO LANKA Customer engagement Forumஇன் நடுவர் குழாம் இந்தியா மற்றும் இலங்கையின் படைப்புஇ தொடர்பாடல், நிறுவனஇ ஊடகம், டிஜிட்டல் தொடர்பாடல் மற்றும் சந்தைப்படுத்தல் துறையை சார்ந்த நபர்களை ஆலோசனை அங்கத்தவர்களாக கொண்டுள்ளது.

இத்தருணத்தில் வங்கி தனது வாடிக்கையாளர்கள், நெருங்கிய உறவை பேணி வரும் சமூகவலைத்தள fans, அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊழியர்கள் மற்றும் அதன் சமூகவலைத்தள மூலோபாயங்களை வகுத்து நடைமுறைப்படுத்தும் Loops Solutions ஆகியவற்றிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

-நுனெ-