இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இம்மாவட்டத்தை சேர்ந்த வறிய, வருமானம் குறைந்த, போரால் பாதிக்கப்பட்ட 100 ஆலயங்களின் கட்டுமான வேலைகளுக்கு உதவுகின்ற திட்டத்தின் முதல் கட்டமாக இன்று காலை 30 ஆலயங்களுக்கு தலா 20 சீமெந்து மூட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் வைத்து யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி குறித்த ஆலயங்களின் பிரதிநிதிகளிடம் சீமெந்து மூட்டைகளை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

குறித்த வேலை திட்டத்தில் பயனாளிகளாக இணைந்து கொண்ட ஏனைய ஆலயங்களுக்கான சீமெந்து மூட்டைகள் கட்டம் கட்டமாக வருகின்ற தினங்களில் வழங்கி வைக்கப்படும்  என தெரிவித்துள்ளார்.