(க.கிஷாந்தன்)

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் 337 குடும்பங்களை சேர்ந்த 1336 பேர் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஷ்பகுமார தெரிவித்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களிலும் உறவினர், அயலவர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். மேலும், சீரற்ற காலநிலையினால் நுவரெலியாவில் 68 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

இந் நிலையில் மழை தொடர்ச்சியாக நீடித்து வருவதால் மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸாக்கலை,லக்ஷபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்த்தேக்கங்களில் நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்றும் இன்று காலை திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.