இலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளமை இலங்கை அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்த 16 பேருடன் நான் முன்னெடுக்கவுள்ள பேச்சுவார்த்தைகள் நிச்சயம் வெற்றியளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று என்னை சந்திக்க வருபவர்கள் எனக்கு புதியவர்கள் இல்லை எனது அமைச்சரவையில் இருந்தவர்களே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நிலை குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.