மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 11 ஆவது ஐ.பி.எல். அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சன் ரைஸஸ் ஹைதராபாத் அணி, சாஹார் வீசிய முதலாவது ஓவரின் முதலாவது பந்திலே தவான் ஆட்டம் இழந்தார். அத்துடன் அடுத்து வந்த அணித் தலைவர் வில்லியம்சன் அதே ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை சன்ரைஸஸ் அணி பெற்றது.

140 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வொட்சன், புவனேஸ்குமார் வீசிய முதலாவது ஓவரில் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறி சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

சென்னை அணியின் விக்கெட்டுக்களும் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்து இறுதியாக 8 விக்கெட்டுக்களை இழந்து 6 பந்துகளுக்கு 6 ஓட்டங்கள் என்ற நிலையில் தடுமாறியது.

இந் நிலையில்  புவனேஸ்குமார் வீசிய 20 ஆவது ஓவரின் முதல் பந்திலே சிக்ஸர் அடித்த டுப்ளெஸ்ஸி சன்ரைஸ் அணியை கதிகலங்க வைத்தார்.