இளைஞன் ஒருவரை கோராமான முறையில் வெட்டிக் கொலை செய்யத இரு சந்தேக நபர்களை வெள்ளவாய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.  

வெள்ளவாயாப் பகுதியின் எத்திலிவெவ பகுதியில் நேற்று இரவு  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

எத்திலிவெவவையைச் சேர்ந்த ஆர்.எம்.கருணாசுந்தர என்ற 21 வயது இளைஞனே  உயிரிழந்துள்ளார். 

குறித்த  இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  கொலை செய்யப்பட்டவரின் சடலம் வெள்ளவாயா அரசினர் வைத்தியசாலையில் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்கென்று வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவாயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.என்.ஜயரட்ன தலைமையிலான குழுவினர் கொலை குறித்து புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெள்ளவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.