ஹோமாகம நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றுக்கு அருகில் இன்று மதியம்  கொள்ளையிட வந்த இருவரை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.

குறித்த வங்கியில் பணத்தை வைப்பு செய்ய வந்த நபர் ஒருவரிடம் இருந்து பணத்தை கொள்ளையிடுவதற்காக வங்கிக்கருகில் சந்தேகிக்கும் படி சுற்றித்திரிந்துள்ளதை அவதானித்த  பொலிஸ் போக்குவரத்து  பிரிவினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்த கூரிய ஆயுதங்கள் இரண்டும்,  துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.