வட மாகாணத்தில் இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமானது கால்நடை வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு உரிய சேவையை வழங்குவதில்லை என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் கூடுதலாக கால்நடை வளர்ப்பினையே  மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைகள் என்பவற்றை மேற்கொள்வதற்கு பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இந் நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தின் ஆளணி பற்றாக்குறை மற்றும் வாகன வசதி என்பன இல்லாத காரணத்தினாலேயே மேற்கண்ட சேவைகளை  வழங்க முடியாதுள்ளதாக பிரதேச கால்நடை சுகாதார திணைக்களத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே வட மாகாண கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தின் வளப் பற்றாக்குறையை தீர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.