வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டால் மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கலாம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இன்றைய திகதியில் மூளையிலுள்ள இரத்த குழாய்களில் எற்படும் ரத்தகசிவின் காரணமாக பக்கவாதத்தினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பதினைந்து சதவீதமாக உயர்ந்திருக்கிறது. மூளையில் உள்ள இரத்த குழாய்கள் பலவீனமாக இருப்பதாலும் அல்லது இரத்தகுழாய்கள் பாதிக்கப்படுவதாலும் இரத்த கசிவு ஏற்படுகிறது. இதனால் மூளையின் செயல்பாடுகளில் சீரான தன்மையை பராமரிக்கவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதற்காக மூளைக்கு அதிகளவில் அழுத்தம் கொடுக்கப்படுவதை தவிர்க்கவேண்டும்.

இந்நிலையில் 90 சதவீத பக்கவாதத்தை குணப்படுத்திட இயலும். அதற்கு நாம் எப்போதும் எம்முடைய இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவேண்டும். வாரத்திற்கு ஐந்து தினங்களாவது நடைபயிற்சியையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும். சரிசமவிகித உணவை எடுத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் சோடியம் சத்து குறைவாக இருக்கும் உணவிற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவேண்டும். உடல் எடையை குறையாமல் இயல்பான அளவில் அவை இருக்கும்படி பராமரிக்கவேண்டும். மது அருந்துவதையும், புகை பிடிப்பதையும் முற்றாக தவிர்க்கவேண்டும்.

வைத்தியர் கோடீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.