கௌதம் கார்த்திக் நடிக்கும் தேவராட்டம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று ஆரம்பமானது. 

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் பெயர் குறிப்பிடும்படியான படங்கள் அவருக்கு அமையவில்லை. இதையடுத்து அவர், ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து ஆகிய அடல்ட் செக்ஸ் காமெடி படங்களில் நடித்து இளைஞர்களை கவர்ந்துள்ளார். 

குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் தேவராட்டம் ஆடும் கலைஞராக நடிக்கிறார்.

 கிராமிய பின்னணியில் நடிப்பு, உணர்வுபூர்வமான படத்தில் கௌதம் கார்த்திக்கின் ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகையொருவடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

குறித்த படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இதனை தன்னுடைய ஸ்டுடியோ கிரீன் என்ற பட நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.