இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைக்கு அவருடைய மகனை தயை கூர்ந்து ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்று கோரி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஏழை தாய் ஒருவர் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
மேசன்இ தச்சன்இ பிளம்பர்இ வெண்டர் போன்ற வேலைகளுக்கு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் 28 வயதுக்கு உட்பட்ட இளையோர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு இடையில் 60 இற்கும் அதிகமானோர் இவ்வேலைக்கு விண்ணப்பித்து உள்ளனர். குறிப்பாக அவர்களுடைய பிள்ளைகளுக்கு இவ்வரசாங்க வேலையை வழங்க கோரி பெற்றோர் இரந்து கோருகின்றனர்.