லொறி விபத்து : படுங்காயமடைந்த பெண் வைத்தியசாலையில்

Published By: Robert

19 Feb, 2016 | 03:08 PM
image

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா அலுத்கால பகுதியில் இன்று பகல் 1.00 மணியளவில் சிறிய ரக லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்ததில் ஒரு பெண்மணி படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஹட்டனிலிருந்து டிக்கோயா பகுதியை நோக்கி வேகமாக சென்ற மேற்படி சிறிய ரக லொறி அலுத்கால பகுதியில் குடைசாய்ந்து பேரூந்திற்காக நின்றுக்கொண்டிருந்த பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

படுங்காயங்களுக்குள்ளான பெண் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த லொறி வேகமாக சென்றதனாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கான மருத்துவ...

2025-01-20 23:15:45
news-image

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அரசியல்...

2025-01-20 16:04:19
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நான்கு...

2025-01-20 22:16:47
news-image

ஓடும் ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து

2025-01-20 21:22:53
news-image

யாழில் 108 கிலோ கஞ்சாவுடன் நால்வர்...

2025-01-20 20:33:04
news-image

ஊடகத்துறையின் அபிவிருத்திக்காக ஊடக நிறுவனமொன்று நிறுவப்படும்...

2025-01-20 16:25:38
news-image

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற...

2025-01-20 19:04:54
news-image

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவனின் மறைவுக்கு...

2025-01-20 23:15:14
news-image

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

2025-01-20 17:25:36
news-image

சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை...

2025-01-20 16:27:53
news-image

போலி கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை...

2025-01-20 16:47:30
news-image

06 கோடியே 63 இலட்சம் ரூபா...

2025-01-20 15:55:37