20 மில்லின் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி எல்.கே.மஹானாம மற்றும் மரக் கூட்டுத் தாபனத்தின் தலைவர் பி. திஸாநாயக்க ஆகியோரை எதிர்வரும் ஜூன் மாதம்  5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களான இருவரும் 10 பில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரப்பட்டிருந்த நிலையில் அதில் முற்பணமாக 20 மில்லியன் ரூபாவை பெற்றுக் கொள்ளும் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.